PORUTHAM | பொருத்தம்

நம் தமிழ் சமூகத்தின் மிக முக்கியமான மற்றும் அவசியமான கட்டமைப்பு என்பது குடும்பமே ஆகும். ஒரு குடும்பம் என்பது கணவன் மனைவி மக்கள் என்று அனைவராலும் கட்டுப்படுகிறது. இந்த குடும்ப அமைப்பின் அஸ்திவாரமே கணவன் மனைவி என்ற உறவு தான். எனவே தான் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக ஆயிரம் முறை விசாரிக்கிறார்கள். இந்தப் பெண்ணிற்கும் இந்த ஆணிற்கும் மற்றும் இவர்கள் இருவரின் குடும்பங்களுக்கும் ஒத்துப் போகுமா? என்பதை நன்கு ஆராய்கிறார்கள் இதனுடைய முக்கிய படிநிலைகளில் ஒன்று தான் இந்த திருமண பொருத்தம் மற்றும் ஜாதக பொருத்தம்.

திருமணப் பொருத்தம் Thirumana Porutham

ஜாதக பொருத்தம் மற்றும் திருமண பொருத்தத்தை கணிப்பதன் மூலமாக கணவன் மனைவியாக மாறவிருக்கும் ஆண் பெண் இருவரின் மனமும் குணமும் ஒத்துப் போகுமா இறுதிவரை இவர்கள் மகிழ்ச்சியாக தங்களுடைய வாழ்க்கையை நடத்துவார்களா இவர்களின் உடல் நலனில் கூட ஏதேனும் குறைகள் ஏற்படுமா என்பதை எல்லாம் கூட நன்கு கணிக்க முடியும்.

இந்த காரணத்தினாலேயே ஜாதக பொருத்தமானது ஒரு திருமணத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பத்து பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்த காலங்கள் போய், தற்போதைய நவீன காலகட்டத்தில் 12 பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்கின்றனர். அந்த பொருத்தங்கள் என்னென்ன அவற்றினுடைய விளக்கங்களை இந்த பதிவில் நாம் காணலாம்.

  1. தினப்பொருத்தம்
  2. கணப் பொருத்தம்
  3. ராசி பொருத்தம்
  4. யோனிப்பொருத்தம்
  5. ரஜ்ஜு பொருத்தம்

  1. தினப் பொருத்தம்
  2. கணப் பொருத்தம்
  3. மகேந்திர பொருத்தம்
  4. ஸ்திரீ தீர்க்க பொருத்தம்
  5. யோனி பொருத்தம்
  6. இராசி பொருத்தம்
  7. இராசி அதிபதி பொருத்தம்
  8. வசிய பொருத்தம்
  9. ரஜ்ஜி பொருத்தம்
  10. வேதை பொருத்தம்
  11. நாடிப் பொருத்தம்
  12. விருட்சம் பொருத்தம்

தினப் பொருத்தம்

திருமணத்திற்குப் பின்பு கணவனும் மனைவியுமாக  இருவரும் எவ்வாறு அவர்களுடைய நாளையும் பொழுதையும் கடத்துகிறார்கள்… என்பதை கணிப்பதே இந்த தினப் பொருத்தமாகும். தினப் பொருத்தம் எனும் பெயரிலேயே அதற்கான விளக்கமும் அமைந்திருக்கிறது என்பது உண்மையாகும். தினம் என்றால் ஒரு நாளை குறிக்கிறது அப்படியானால் தினம் தினம் ஒவ்வொரு நாளும் என்று பொருளாகும். வாழ்க்கை முழுவதும் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்களா என்பதை கணிக்கும் பொருத்தமே இந்த தினப் பொருத்தமாகும். 

இந்த தினப் பொருத்தத்தை கணிப்பதற்கு பெண்ணின் விண்மீனிலிருந்து அதாவது நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணி அந்தத் தொகையை ஒன்பதால் வகுக்க வேண்டும் அப்படி வகுக்கும்போது மீதம் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றால் அது மிகச்சிறந்த பொருத்தமாகும். அப்படி கிடைக்கும் மீதமானது 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 25 இந்த எண்களில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது தினப்பொருத்தம் பொருந்தவில்லை என்பதை குறிக்கிறது.

கணப் பொருத்தம் என்பது மணமக்களுடைய குணாதிசயத்தை அதாவது குண நலன்களை குறிக்கும் பொருத்தமாகும். ஆணும் பெண்ணும் மனதளவிலும் ஒத்துப் போவார்களா? என்பதை கணிக்கும் பொருத்தமே இந்த கணப் பொருத்தமாகும். கணப் பொருத்தத்தில் தேவ கணம், மனித கணம், ராட்சச கணம் என மூன்று வகையான கணங்கள் உள்ளன. இதில் ஆணும் பெண்ணும் ஒத்த கணம் உடையவர்களாக இருப்பதே சிறந்த பொருத்தமாகும். அதாவது தேவ கணமுடைய உடைய ஆணும் தேவ கணமுடைய பெண்ணும் இணைவதே சிறந்த பொருத்தமாகும். 

ஒவ்வொரு கனத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு.

தேவ கணமுடையவர்கள் உயர் சிந்தனைகளும் உயர் குணங்களும் உயர்ந்த லட்சியங்களும் உடையவர்களாக இருப்பார்கள். மனித கணமுடையவர்கள்  வாழ்க்கையில் உள்ள நெளிவு சுளிவுகளை தெரிந்தவர்களாக இருப்பார்கள். ராட்சச கணமுடையவர்கள் யாருக்கும் அடங்காதவர்களாக இருப்பார்கள்.

ஒரு திருமணத்தின் மிக முக்கியமான காரணமும் அவசியமும் அந்த குடும்பம் தழைக்க வேண்டும் அடுத்த தலைமுறை எனப்படும் வாரிசு உருவாக வேண்டும் என்பதே ஆகும். மகேந்திர பொருத்தம் பொருந்தி இருக்கும் பட்சத்தில் மணமக்களுக்கு வாரிசானது நிச்சயம் உண்டு. அதேபோல் மகேந்திர பொருத்தம் பொருந்தவில்லை என்றால் குழந்தையே பிறக்காதா? அடுத்த வாரிசு என்பது இருக்காதா? என்று பலருக்கும் ஐயமானது ஏற்படும். இதனை தெளிவுபடுத்த விரும்புகிறது இந்த பதிவு. அதாவது மகேந்திர பொருத்தம் இல்லையென்றாலும் மணமக்களுக்கு நிச்சயம் குழந்தை பேரு உண்டு. அதாவது திருமணத்திற்கு அத்தியாவசியமான ஐந்து பொருத்தங்கள் மட்டும் பொருந்தி இருந்தால் கூட நிச்சயமாக குழந்தை பேரு கிடைக்கும்.

தமிழ் திருமணப் பொருத்தம் Marriage Porutham

ஸ்திரீ என்பது பெண்ணைக் குறிக்கிறது. திருமணத்திற்கு பின்பாக பெண்ணினுடைய வளங்களையும் நலன்களையும் குறிக்கும் பொருத்தமே இது. இந்த திருமணத்தின் மூலம் 16 செல்வங்களையும் பெற்று பெண்ணானவள் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்வாளா? அல்லது ஏதேனும் அவளுக்கு குறைகள் ஏற்படுமா என்பதை எல்லாம் கணிக்கும் பொருத்தமே இந்த ஸ்திரீ தீர்க்கப் பொருத்தமாகும் பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணினால் ஆணின் நட்சத்திரமானது ஏழு இடங்களுக்கு அப்பால்  இருக்குமேயானால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தமானது பொருந்தி இருக்கிறது என்று அர்த்தம்.

யோனி பொருத்தம் என்பது மணமக்களின் தாம்பத்ய உறவை கணிக்கும் பொருத்தமாகும். மகேந்திர பொருத்தம் இல்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு இந்த யோனி பொருத்தமானது பொருந்தி இருந்தால் நிச்சயம் குழந்தை பேரு கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவியாக வாழப்போகும் மணமக்களின் அன்யோனியத்தை தாம்பத்திய உறவின் மூலமாக கணிப்பதே இந்த பொருத்தத்தின் சிறப்பாகும்.

ஜாதகத்தில் இருக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் 27 வகையான விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன இதில் ஆணின் நட்சத்திரத்திற்கும் பெண்ணின் நட்சத்திரத்திற்கும் எந்த விலங்குகள் வருகிறதோ அவை ஒரே மாதிரியான உணவு தன்மையை கொண்டவையாக இருப்பின் இந்த பொருத்தம் பொருந்தியுள்ளது என்று அர்த்தமாகும். எடுத்துக்காட்டாக மாமிசம் உண்ணும் விலங்குகள் மாமிசம் உண்ணும் மற்றொரு விலங்குடன் தான் இணைய வேண்டும்.

பூரம் – மானுஷ பெண் எலி

மகம் – ராஷஸ ஆண் எலி

உத்திரம் – மானுஷ பெண் எருது

அஸ்தம் – தேவம் பெண் எருமை

பூரட்டாதி – மானுஷ ஆண் சிங்கம்

உத்திரட்டாதி – மானுஷ பெண் பசு

ரேவதி – தேவம் பெண் யானை

சதயம் – ராஷஸ பெண் குதிரை

கேட்டை – ராஷஸ ஆண் மான்

விசாகம் – ராஷஸ ஆண் புலி

திருவோணம் – தேவம் பெண் குரங்கு

உத்திராடம் – மானுஷ பெண் மலட்டு பசு

அவிட்டம் – ராஷஸ பெண் சிங்கம்

கிருத்திகை – ராஷஸ பெண் ஆடு

ரோகிணி – மானுஷ ஆண் நாகம்

பூசம் – தேவம் ஆண் ஆடு

ஆயில்யம் – ராஷஸ ஆண் பூனை

திருவாதிரை – மானுஷ ஆண் நாய்

பனர்பூசம் – தேவம் பெண் பூனை

பரணி – மானுஷ ஆண் யானை

அஸ்வினி – தேவ ஆண் குதிரை!

பூராடம் – மானுஷ ஆண் குரங்கு

அனுஷம் – தேவம் பெண் மான்

மிருகசீரிஷம் – தேவம் பெண் சாரை

மூலம் – ராஷஸ பெண் நாய்

திருமணத்திற்கு அவசியமான மிக முக்கியமான ஐந்து பொருத்தங்களில் ராசி பொருத்தமும் ஒன்றாகும். ஒரு குடும்பத்தின் வாரிசை நிர்ணயிக்கும் பொருத்தமாக இந்த ராசி பொருத்தமானது இருக்கிறது. அதாவது மணமக்களுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பிறக்காதா? அவர்களுடைய சந்ததியானது விருத்தி அடையுமா? என்பதையெல்லாம் கணிக்கும் பொருத்தமே! இந்த ராசி பொருத்தம் ஆகும். பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரமானது ஆறு நிலைகளுக்கு தள்ளி இருக்கும் பட்சத்தில் ராசி பொருத்தமானது பொருந்தி இருக்கிறது என்று அர்த்தம் ஆகும்.

நமது பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி இருப்பார். அதேபோல் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ஒரு அதிபதி இருப்பார். எனவே இந்த அதிபதிகளுக்கு இடையேயான பொருத்தமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ராசி அதிபதி பொருத்தத்தில் நட்பு, பகை சமம் என்ற மூன்று நிலைகள் உள்ளன. இதில் நட்பும் சமமும் என்ற நிலை வந்தால் நல்லது. பகை என்ற நிலை மட்டும் வந்து விடுதல் கூடாது. அப்படி இருப்பின் இதில் ராசி அதிபதி பொருத்தமானது பொருந்தவில்லை என்று அர்த்தமாகும்.

Jathagam Porutham ஜாதகப் பொருத்தம்

வசியப் பொருத்தம் பெயரிலேயே இதற்கான விளக்கமும் இருக்கிறது என்பது உண்மை. வசியம் செய்தல் அதாவது ஆணின் ராசியும் பெண்ணின் ராசியும் வசியப்பட்டு ஒருவரை ஒருவர் அன்பின் பால் ஈர்த்து வாழ்வின் எல்லை வரை அன்போடு வாழ்வார்களா? என்பதை கணிக்கும் பொருத்தமே இந்த வசிய பொருத்தம் ஆகும்.

பஞ்சாங்கத்தின் படி அதாவது இந்த திருமண பொருத்தத்தில் ஒவ்வொரு ராசிக்கும் அதற்கு வசிய படும் மற்றொரு ராசி உண்டு. எனவே அதை கணக்கில் கொண்டு இந்த பொருத்தமானது கணிக்கப்படுகிறது. இதற்கான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இடது பக்கமாக உள்ளவை பெண்ணின் ராசியா எடுத்துக் கொள்ளுங்கள். வலது பக்கமாக உள்ளவற்றை ஆணின் ராசியாக எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த ராசிக்கு எந்த ராசி வசிய படும் என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

மேஷம்சிம்மம், விருச்சகம்
ரிஷபம்கடகம், துலாம்
மிதுனம்கன்னி
கடகம்விருச்சிகம், தனுசு
சிம்மம்துலாம், மீனம்
கன்னிரிஷபம், மீனம்
துலாம்மகரம்
விருச்சகம்கடகம், கன்னி
தனுசுமீனம்
மகரம்மேஷம், கும்பம்
கும்பம்மீனம்
மீனம்மகரம்

ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால் ஒரு திருமணமே நிச்சயமாக நடக்காது ஏனென்றால் பத்து பொருத்தங்களிலும் மிக மிக முக்கியமான பொருத்தம் இந்த ரஜ்ஜு பொருத்தமே ஆகும். ரஜ்ஜு என்றால் கயிறு என்று அர்த்தமாகும். நடக்கவிருக்கும் திருமணத்தின் மாங்கல்ய பலத்தை குறிக்கும் பொருத்தமே ரஜ்ஜூ பொருத்தமாகும்.

சிரசு ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு, உதர ரஜ்ஜு, பாத ரஜ்ஜீ, ஊரு ரஜ்ஜு என ஐந்து வகையான ரஜ்ஜுகள் உள்ளன.

சிரசு ரஜ்ஜு

திருமணப் பொருத்தத்தில் சிரசு ரஜ்ஜு என்று வந்துவிட்டால் தலைவனுக்கு அதாவது மணமகனுக்கு ஆபத்து என்று பொருளாகும். சிரசு என்றால் தலை என்று பொருள். எனவே இது தலைவனை குறிக்கிறது. 

கண்ட ரஜ்ஜு

கண்ட என்பது கழுத்தை குறிக்கிறது இதன் பொருள் மாங்கல்யத்தை சுமக்கும் பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்பதாகும். 

உதர ரஜ்ஜு

உதரம் என்பது ரத்தத்தைக் குறிக்கிறது அதாவது மணமக்களின் வாரிசுகளை பாதிக்கும். 

ஊரு ரஜ்ஜீ

ஊரு ரஜ்ஜீவின் பொருளானது வீட்டில் செல்வமானது நிலைக்காது. 

பாத ரஜ்ஜு

பாத ரஜ்ஜீ என்பது பிரிவை குறிக்கிறது கணவன் மனைவி நிச்சயம் பிரிந்தே வாழ்வார்கள் என்பது இதன் பொருளாகும்.

வேதை என்பதன் பொருள் தாக்கிக் கொள்ளுதல் ஆகும். அதாவது பெண்ணின் நட்சத்திரமும் ஆணின் நட்சத்திரமும் ஒன்றை ஒன்று பகையாக கொள்கிறதா? தாக்கிக் கொள்கிறதா? என்பதை கணிக்கும் பொருத்தமே இந்த வேதை பொருத்தமாகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதை தாக்கிக் கொள்ளும் வேதையான மற்றொரு நட்சத்திரம் உண்டு எனவே அந்த பட்டியலை கீழே பதிவு செய்துள்ளோம்.

உத்திரத்திற்குபூரட்டாதி வேதை ஆகும்.
கார்த்திகைக்குவிசாகம் வேதை ஆகும்.
அசுவினிக்குகேட்டை வேதை ஆகும்.
புனர் பூசத்திற்குஉத்ராடம் வேதை ஆகும்.
பூசத்திற்குபூராடம் வேதை ஆகும்.
ஆயில்யத்திற்குமூலம் வேதை ஆகும்.
பூரத்திற்குஉத்ரட்டாதி வேதை ஆகும்.
ரோகிணிக்குசுவாதி வேதை ஆகும்.
மகத்திற்குரேவதி வேதை ஆகும்.
திருவாதிரைக்குதிருவோணம் வேதை ஆகும்.
அஸ்தத்திற்குசதயம் வேதை ஆகும்.
பரணிக்குஅனுஷம் வேதை ஆகும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ளவை ஒன்றுகொன்று வேதை ஆகும். இந்த நட்சத்திர இணைவானது அதமம் ஆகும்.

இதை தவிர மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று வேதை நட்சத்திரங்களாக உள்ளதால் இவைகளும் பொருந்தாது. இந்த நட்சத்திரக்காரர்களை இணைக்காமல் இருப்பது நல்லது.

இராசி நட்சத்திரம் பொருத்தம் Rasi Porutham

திருமண பொருத்தத்தில் பித்த நாடி, வாயு நாடி, நீர் நாடி என மூன்று வகையான நாடிகள் உள்ளன. இதில் ஆணும் பெண்ணும் ஒரே நாடியாக இருத்தல் கூடாது. வெவ்வேறு நாடியாக இருப்பின் நாடிப் பொருத்தமானது பொருந்தியுள்ளது என்று அர்த்தமாகும். நவீன மருத்துவ காலகட்டத்தில் இந்த நாடி பொருத்தமானது அவ்வளவு அவசியமானதாக பார்க்கப்படுவதில்லை.

விருட்சம் என்பது மரத்தை குறிக்கிறது ஒரு குலமானது ஆல மரத்தை போல் அடுத்தடுத்த வாரிசுகளால் நிரம்பி விருட்சத்தை போல வளருமா என்பதை கணிக்கும் பொருத்தமே இந்த விருட்ச பொருத்தமாகும். பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மரமானது குறிப்பிடப்பட்டிருக்கிறது அதை கணிக்கும் பொழுது கிடைக்கும் மரமானது பால் மரமாக இருப்பின் விருட்சப் பொருத்தமானது பொருந்தியுள்ளது என்று அர்த்தமாகும்.